அவுஸ்திரேலியாவில் பிரதான நிதி நிறுவனத்தின் CEOவாக இலங்கை பெண் நியமனம்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பிரதான நிதி நிறுவனமான Macquarie நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இலங்கை பெண்ணான ஷெமாரா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நிகலஸ் முவர் ஓய்வு பெற்றதனை தொடர்ந்து அந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரதான 20 நிறுவனங்களில் ஒன்றிற்கு பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் முதல் பெண் அவர் என்பது அந்த நாட்டு வர்த்தக துறைக்குள் சிறப்பு மிக்க விடயமாகும்.

அவர் முதலாவதாக 1987ஆம் ஆண்டு Macquarie நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு ஓய்வு பெற்ற முவருக்கு கீழ் நிறுவனத்தில் அவர் பணியாற்றியுள்ளார்.

10 வருடங்கள் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைதுவ இயக்குனர் பதவியில் செயற்பட்ட நிகலஸ் ஓய்வு பெற்று செல்வும் போது, ஷெமாரா விக்ரமநாயக்க இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் எனவும், தன்னுடன் 30 வருடங்கள் சேவை செய்த ஷெமாரா விக்ரமநாயக்க சிறப்பாக பணியாற்றிய நம்பகத்தன்மையை கொண்ட ஒருவர் எனவும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.