வெளிநாடொன்றில் புகலிடக் கோரிக்கை மறுப்பு! இலங்கை தமிழ் இளைஞன் தற்கொலை

Topics :

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட வசந்தகுமார், நவுரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக மூளைச்சாவடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.