இலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞராக மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.

அந்நாட்டு ஊடகங்களை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை அண்மையில் செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத்திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டேன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மொஹமட் நிஸாம்தீன் குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.