800க்கும் மேற்பட்டவர்களின் விசாவை ரத்து செய்தது அவுஸ்திரேலியா!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 800 விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஐந்நூறு பேர் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 பேர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் - 53 பேர் குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் - 34 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் - 13 பேர் கொலைக்குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் தாக்குதல் நடத்தியவர்கள் 125 பேர் மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் 56 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, குறைந்தது 12 மாத சிறைத்தண்டனை பெற்ற பாரதூரமான குற்றவாளிகளின் விசாக்களை பறித்து, அவர்களை சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை உள்துறை அமைச்சு பெற்றிருந்தது.

இதன்பிரகாரம், எதிர்காலத்தில் குற்றவாளிகளுக்கு அவுஸ்திரேலியாவில் இடமில்லை என அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.