அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி - பலர் படுகாயம்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய நகரங்களில் ஒன்றான டார்வினியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தம் காரணமாக ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டார்வின் நகரின் மையப்பகுதியில் இன்று பிற்பகல் 6 மணி முதல் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 45 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவர் அண்மையில் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னதாக McMinn Street-இல் அமைந்துள்ள Palms Motel–க்குச் சென்ற தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் டார்வின் நகரின் Gardens Hill Crescent, Buff Club ஆகிய இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

டார்வின் நகரில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers