அவுஸ்திரேலியாவில் தவிக்கும் இலங்கை அகதி! லண்டனில் வசிக்கும் சகோதரி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதி ஒருவர், தன்னை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

2013ம் ஆண்டு முதல் மனுஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

திரவியராஜா சுப்பிரமணியம் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பிரித்தானியாவில் உள்ள தனது சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு திரவியராஜா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரவியராஜா சுப்பிரமணியம் 2013 முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது மனஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக திரவியராஜா சுப்பிரமணியத்தின் சகோதரி சுசீலா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சகோதரர் ஒரு அகதி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மோசமடைந்து வரும் தனது சகோதரர் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரது எதிர்காலம் குறித்து தான் அச்சமடைந்துள்ளேன்” என சுசீலா தெரிவித்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers