இலங்கை வந்து வெளிநாட்டுக்கு திரும்பிய இளம் பெண் சுட்டுக்கொலை

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா திரும்பிய இளம் பெண்ணொருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான Michaela Dunn என்ற பெண் இலங்கையில் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு சென்ற நிலையில், சிட்னியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டதாரியான அவர் உலகின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது அவரின் பொதுபோக்கு. மகளை இழந்துள்ளமை பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரி்வித்துள்ளார்.

Michaela Dunn கடைசியாக இலங்கை வந்து சென்ற புகைப்படங்கள் அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.