அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞன்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தங்கியிருந்த அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற் கொலை என கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.