அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீது அவுஸ்திரேலியா கரிசனை

Report Print Ajith Ajith in அவுஸ்திரேலியா

இலங்கையில் சீனாவின் நிதியுதவியில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பட்டுப்பாதை திட்டம் என்பன தொடர்பில் கரிசனைக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவினால் ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சீனாவின் மக்களுடன் தமக்கு பிரச்சினையில்லை. சீனாவில் இருந்து வந்து குடியேறியுள்ளவர்களுடன் பிரச்சினை இல்லை.

எனினும் சீனாவின் கொம்யூனிஸக்கட்சி மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பிலேயே தாம் கரிசனைக்கொண்டுள்ளதாக டட்டன் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, ஆபிரிக்க மற்றும் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் சுமார் 7000 திட்டங்களை கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் சீனாவின் துறைமுக அபிவிருத்தி திட்டமும் பிரச்சினைக்குரிய விடயமே என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார்.