அவுஸ்திரேலியாவை நோக்கிய ஆட்கடத்தலை தடுக்க சென்னையில் சந்திப்பு!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவை ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தலை தடுப்பதற்கான முன்னெடுப்புகள் குறித்து இந்திய தரப்பினரை அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் தளபதி மேஜர் ஜெனரல் கிராக் புர்னி, ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் தடுப்பிற்கான அவுஸ்திரேலிய தூதர் ப்ரிஸ் ஹச்செசன் சென்னையில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பைச் சேர்ந்த சந்திரஹாசன் பங்கெடுத்துள்ளார்.

ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் நிகழ்வுகளை தடுக்கும் விதமாக மலேசியாவில் நடந்த இதே போன்றதொரு சந்திப்பிலும் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் தளபதி மேஜர் ஜெனரல் கிராக் புர்னி பங்கெடுத்திருக்கிறார்.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலியாவை அரசு, படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் குடியேற விடமாட்டோம் என எச்சரித்து வருகின்றது.

அந்த வகையில், 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை அவுஸ்திரேலியாவை அடைய முயன்ற 37 படகுகளில் வந்த 865 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை நோக்கிய இவ்வாறான படகுவழி ஆட்கடத்தல் சம்பவங்கள் இந்தியா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளன.