அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரும் நாடுகளின் பட்டியல்! ஐந்தாவது இடத்தில் இலங்கை

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரும் வெளிநாடுகளின் பட்டியலில், ஐந்தாவது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கணக்கெடுப்புகளுக்கு அமைய வருடாந்தம் அவுஸ்திரேலியவில் குடியுரிமை கோரியவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரித்தானியர்களுக்கும் மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கும் உள்ளனர். நான்காவது இடத்தில் சீனர்கள் உள்ளது.

2018 - 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4861 இலங்கையர்கள் அவுஸ்திரேலியர்கள் குடியுரிமை கோரியுள்ளனர்.

சமகாலத்தில் மெல்பேர்ன், சிட்னி மற்றும் பேர்த் ஆகிய நகரங்களில் பல இலட்சம் இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers