அவுஸ்திரேலிய விசா எச்சரிக்கை பட்டியலில் 36,000 இந்தியர்கள்!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

கடுங்குற்றம் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு ஆபத்தக்குரியவர்கள் எனக் கருதப்படும் பட்டியலில் 36,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம்பெயற்றுள்ளனர்.

இப்பட்டியல், அவுஸ்திரேலிய விசா வழங்குவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுப்பதில் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகின்றது.

திட்டமிட்ட குடியேற்ற மோசடி, கடுங்குற்றம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், விசா விதிகளை மீறியவர்கள் என 7 லட்சம் வெளிநாட்டினர்களை உள்ளடக்கிய பட்டியலை கொண்டிருக்கிறது அவுஸ்திரேலிய அரசு.

இப்பட்டியலிலேயே 36,168 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

விசா விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்க உள்துறை அதிகாரிகளுக்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும் எனக் கூறுகிறார் குடியேற்ற வழக்கறிஞரான மிச் சைமன்ஸ்.

“எங்களைப் போன்றவர்களால் அப்பட்டியலை காண முடியாது. யாரேனும் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் எந்த வழிகளும் கிடையாது,” என்கிறார் மிச் சைமன்ஸ்.

அவுஸ்திரேலிய எல்லைப்படையின் கருத்துப்படி, கணினியில் உள்ள அப்பட்டியல் தானாக பரிசோதிக்கப்பட்டு ஒருவேளை விசா விண்ணப்ப விவரங்களுடன் ஒத்துப்போனது என்றால் விசா வழங்குவதற்கான முடிவு எடுக்கும் போது அது கணக்கில் கொள்ளப்படும்.

திட்டமிட்ட குடியேற்ற முறைகேட்டில் ஈடுபடுவபவர்களின் பட்டியலில் சீனா, மலேசியா, இந்தோனேசியாவுக்கு அடுத்த நிலையிலேயே இந்தியா இருக்கிறது.

அதே சமயம், இண்டர்போல் பட்டியலில் ரஷ்யா, மெக்சிக்கோ, துருக்கி நாட்டவர்களுக்கு அடுத்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.