அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோருபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது, அவுஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குடியேறிகளின் நோக்கமாக இருந்து வருகின்றது.

ஆனால், அவுஸ்திரேலிய அரசின் கடுமையான கட்டுப்பாட்டால் குடியுரிமைக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குடியுரிமை தொடர்பான புள்ளிவிவரம் விவரிக்கிறது.

கடந்த 2018-19 நிதியாண்டில் அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள குடியேறிகளின எண்ணிக்கை 138,387 ஆகும். அதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.

கடந்த 2017- 18 நிதியாண்டில் 239,413 குடியேறிகள் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவே, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையை இருக்கின்றது.

இந்த நிதியாண்டை பொறுத்தமட்டில், கடந்த 4 மாதங்களில் 48,255 பேர் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பம் தொடர்பான முடிவுக்கு இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவுஸ்திரேலிய இடப்பெயர்வு கவுன்சலின் கர்லா வில்ஷிரீ.

கடந்த ஜூலை மாதம், அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரமாக அவுஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது.

Latest Offers

loading...