அவுஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக ஒருபோதும் நுழைய முடியாது: தொடரும் எச்சரிக்கை

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களை முழுமையாக தடுத்தும் நிறுத்தும் கொள்கையினை அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பது பற்றிய சந்திப்பை இலங்கை காவல்துறையின் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரி சேனரத்னவுடன் நடத்தியிருக்கிறார் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு,

படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்’ என முழுமையாக நிராகரித்து வருகின்றது.

அந்த வகையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் படகு வழியே வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளை பப்புநியூகினியா மற்றும் நவுருத்தீவில் இன்றும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது அவுஸ்திரேலிய அரசு.