அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரின் மோசமான செயற்பாடு! பல சிறுமிகள் பாதிப்பு

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா
568Shares

அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரில் வாழும் இலங்கையர் ஒருவர் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிறு பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறான புகைப்படம் பெற்றுக் கொள்வதோடு மேலும் பல புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறித்த இலங்கையர் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இலங்கை இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி சமூக வலைத்தள பக்கங்கள் பயன்படுத்தி பிரித்தானியாவில் உள்ள சிறுமியுடனும் அமெரிக்காவில் உள்ள சிறுமியுடனும் இந்த நபர் தொடர்பில் இருந்துள்ளார். பொலிஸார் குறித்த நபரின் அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இதற்கான ஆதரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞனின் நம்பிக்கையை வென்ற சிறுமிகள் அவருக்கு அந்தரங்கள் புகைப்படங்களை அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவ்வாறு கிடைத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு மேலும் தனக்கு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்ப வேண்டும் எனவும் அவ்வாறு அனுப்பவில்லை என்றால் குறித்த அந்தரங்க புகைப்படங்களை சிறுமியின் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அவ்வாறு அவரது கோரிக்களை ஏற்காதமையினால் சிறுமிகளின் புகைப்படங்களை நண்பர்கள் வட்டாரத்திலும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

அதற்கமைய சிறுமிகள் வழங்கிய முறைப்பாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மேலும் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.