அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா
1205Shares

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி 21 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.

இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.