ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா? பல மில்லியன் டொலர்கள் வருமானம்

Report Print Vethu Vethu in வர்த்தகம்

வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக 10 லட்சத்து 290 ரூபாய் அதிக வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இளநீர் ஒன்றுக்காக 130 ரூபாய் கிடைகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் இளநீருக்கான கோரிக்கைகள் அதிகமாக உள்ளதென தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை குறிப்பிட்டுள்ளது.

போத்தல்களில் அடைக்கப்பட்ட இளநீருக்காக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக கிராக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கையில் பல பகுதியில் தேங்காய் பயிரிடுபவர்கள், இளநீர் பயர்செய்கைகளுக்கு அதிக ஆர்வம் காட்டு வேலைத்திட்டம் ஒன்றும் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments