இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் சுவிஸ் நட்சத்திர ஹோட்டல் திறப்பு

Report Print Vethu Vethu in வர்த்தகம்
1109Shares

25 வருடங்களின் பின்னர் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மிகச் சரியான நிலையில் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்படுகிறது என்று, மோவன்பிக் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவியர் ச்சாவி தெரிவித்தார்.

இந்த ஹோட்டலின் ஒவ்வொரு மாடியும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும் என்றும் இது இலங்கையர்களுக்கும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோவன்பிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 83 ஹோட்டல்கள், உலகின் 23 நாடுகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments