இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான உண்மையை கண்டறியும் குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு அனுப்புகிறது
7 பேரைக்கொண்ட உயர்மட்டக்குழு இந்த ஜனவரி மாத நடுப்பகுதிக்குள் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக்குழு, இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில் வலயங்கள், அங்குள்ள பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளது.
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பணியாளர்களின் அடிப்படை உரிமைகள் என்பன தொடர்பாகவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆராயவுள்ளனர்.
இந்தக்குழுவில் 10 பேர் வரை உள்ளடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.