நிபந்னையின்றியே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப்பெற்றது!

Report Print Kamel Kamel in வர்த்தகம்
36Shares

நிபந்தனையின்றியே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு மீளவும் கிடைக்கப் பெற்றது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் அடிபணியாது வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்குவது குறித்து விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வமாக இந்த சலுகைத்திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த சலுகைத் திட்டம் ஊடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் வரிச் சலுகைகள் கிடைக்கப்பெற உள்ளது.

இதன் ஊடான பொருளாதார நலன்கள் பற்றி அறிந்து கொள்ளாதவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் 11 வீதமான வரிச்சலுகை கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை, தொழிலாளர் உரிமைகளை பேணாமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டது.

Comments