கார் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சி! ஏப்ரலில் கிடைக்கும் அதிஷ்டம்

Report Print Vethu Vethu in வர்த்தகம்
2251Shares

இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற முதலாவது மின்சார மோட்டார் வாகனம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை வாகன தயாரிப்பு நிறுவனத்தின் பொறியிலாளர் புஞ்சி பொரளை கே.பீ.கபில டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மின்சார மோட்டார் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கும் நபர்கள் பதிவு செய்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதுவரையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற மின்சார மோட்டார் வாகனம் இந்த நாட்டினுள் 30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த மோட்டார் வாகனம் உள்ளூர் தாயாரிப்பு மற்றும் அதன் விலை 8 இலட்சம் ரூபா என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒரு முறை இந்த மோட்டார் வாகனத்தின் பெட்டரியை சார்ஜ் செய்வதன் பின்னர் 100 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க முடியும். வீட்டில் பொதுவான சுவிட்சில் ஊடாகவும் இந்த வானகத்திற்கு சார்ஜ் ஏற்ற முடியும்

அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சு இதற்காக ஆதரவு வழங்குவதென்றால் இந்த மோட்டார் வாகனத்தை 6 இலட்சத்தில் உட்பட தயாரிக்க முடியும் என கபில டி சில்வா தெரிவித்துள்ளார்.

மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் 4 நபர்கள் இலகுவாக பயணிக்க கூடிய இந்த மோட்டார் வாகனம், நவீன ரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments