இலங்கை மக்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ள தேங்காய்!

Report Print Vethu Vethu in வர்த்தகம்

இலங்கை மக்கள் மற்றுமொரு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயின் விலை சடுதியான விலை அதிகரிப்புக்கு முகங்கொடுத்து வருகிறது.

பல்வேறு சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 75 முதல் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தீவிர கவனம் செலுத்துவதாக இலங்கை தெங்கு செய்கை சபை தெரிவித்துள்ளது.

தேய்காய் விலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது எடுக்கப்படும் முடிவுகள் நாளையதினம் அறிவிக்கப்படவுள்ளன.

சந்தையில் தற்சமயம் தேங்காய் விற்பனை செய்யப்படும் விலை நியாயமனதல்ல என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலை அதிகரிப்பின் நன்மை தெங்கு உற்பத்தியாளர்களுக்கோ தெங்கு சார் கைத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களே இதன்மூலம் நன்மை அடைகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட உணவுக்காக பயன்படுத்தும் தேங்காயின் விலை அதிகரிப்பு குறித்து நாட்டு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.