வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை

Report Print Theesan in வர்த்தகம்

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாபெரும் தொழிற்சந்தை இடம்பெறவுள்ளது.

இன்று மாலை வவுனியா பூங்கா வீதியிலுள்ள பல்கலைக்கழக வாளகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் அனைத்துப் பட்டதாரிகள், பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும், 11ஆம் திகதி சனிக்கிழமை அனைத்து தொழில் வாய்ப்புக்களையும் தேடுபவர்களுக்காகவும் இத்தொழிற்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தகவல் தொழிநுட்பம், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்கள், மற்றும் உயர்கல்வி தொழில்சார் கற்கை தொழிற்பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான வல்லுநர்களை பல்வேறு துறைகளில் நேரடியாகதெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளனர்.

இத் தொழிற்சந்தையில் வவுனியா நகரிலிருந்து கலந்து கொள்வதற்காக விஷேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலவச தொழில்காட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெறவுள்ளன.

தொழிற்சந்தைக்கு வருகை தருபவர்கள் தமது சுயவிபரக் கோவையின் பல பிரதிகளை எடுத்து வருமாறும் வவுனியா வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பாக நிகழ்வுகள் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற விரும்புவர்கள் 076 9450346 குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.