நாட்டின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்தே வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வரப்படும்

Report Print Kamel Kamel in வர்த்தகம்

நாட்டின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்தே வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண முயற்சியான்மையாளர்களை பாராட்டும் நோக்கில் குருணாகாலில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வரும் போது உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது நாம் மிகவும் பின்னிலையில் இருக்கின்றோம்.

நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பிரதான அளவு கோள்களில் ஒன்றாக வெளிநாட்டு சொத்துக்களை வலுப்படுத்த அரசாங்கம் கொள்கைகளை வகுத்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.