சுவிட்சர்லாந்தில் இருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவை

Report Print Vethu Vethu in வர்த்தகம்

சுவிட்சர்லாந்திலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Edelweiss விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.

ஆசிய எல்லைக்குள் தனது சேவையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் Edelweiss விமான சேவை, சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து அவர்கள் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளனர். அதற்காக Edelweiss எயார்பஸ் A340-300 விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயணிக்கவுள்ளது.

இந்த விமான சேவை மூலம் சுவிட்சர்லாந்து மக்கள் மற்றும் வேறு ஐரோப்பிய நாட்டவர்கள் இலகுவாக இலங்கைக்கு வர முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் Edelweiss விமான சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி Bernd Bauer கருத்து வெளியிட்டிருந்தார்.

வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளை விடவும் சுவிட்சர்லாந்து பயணிகள் அதிக காலம், நேரம் மற்றும் பணத்தை செலவிடுகின்றனர்.

எங்கள் விமான சேவை வருடத்திற்கு 11000 சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து 32 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக வருமானத்தை ஈட்டுவதே நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.