இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் வளர்ச்சி

Report Print Vethu Vethu in வர்த்தகம்
1322Shares

இலங்கை ரூபாயின் பெறுமதி சமகாலத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய அறிக்கையின் படி வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் வீழ்ச்சியை சந்தித்திருந்த ரூபாயின் பெறுமதி தற்போது வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் டொலர் விற்பனை செய்தமை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பணபறிமாற்றம் மற்றும் இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்தமை ஆகிய காரணிகளால் இலங்கை ரூபாயின் பெறுமதியில் வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாண மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 151 ரூபாயாக பதிவாகியுள்ளது. விற்பனை விலை 154.79 ரூபாவாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 178.21 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தில் டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 2.2 வீதம் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.