இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் எழுந்துள்ள சிக்கல்

Report Print Ajith Ajith in வர்த்தகம்
இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் எழுந்துள்ள சிக்கல்

ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி என்ற, முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது.

எனினும் அடுத்த ஆண்டுக்கான ஜி.எஸ்.பியின் மீள்அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் இன்னும் வழங்கவில்லை.

இதன் விளைவாக இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 2018 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படும்.

ஐக்கிய அமெரிக்கா, இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக செயற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்கா, 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அறிவித்தமைக்கு எதிராக பல நாடுகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், அமெரிக்காவின் இத்தீர்மானத்தை மீளப் பெறவேண்டுமென கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை உட்பட 128 நாடுகள் வாக்களித்திருந்தன.தமது தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் நாடுகளுக்கான அமெரிக்காவின் சலுகைகள் யாவும் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எச்சரிக்கையையும் மீறி இலங்கை வாக்களித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைக்கான மீள் அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்துள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.