அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

Report Print Vethu Vethu in வர்த்தகம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய தினம் 159.61 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ரூபாவின் விற்பனை பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மே மாதம் 17ஆம் திகதி டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 159.55 ரூபாவாக காணப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் அதிக அளவு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் ரூபாயின் பெறுமதி 3.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Latest Offers