அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 160.006 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலருக்கான கொள்வனவு விலை 156.91 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் டொலருக்காக விதிக்கப்பட்ட அதி கூடிய விலை இதுவாகும்.
இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியின் வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை விடவும் இறக்குமதி செலவினம் அதிகரித்தல், வெளிநாட்டு அந்நிய செலாவணி கிடைக்காமை, நாட்டிலுள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமை இதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.