தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பில் கவனம்

Report Print Ajith Ajith in வர்த்தகம்

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் பேசல ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரி நூற்றுக்கு 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தங்க வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கத்திற்கான இறக்குமதி வரியை நூற்றுக்கு 15 சதவீதத்திலிருந்து குறைந்தது 7.5 சதவீதமாக குறைக்கலாம் என ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers