சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

Report Print Kamel Kamel in வர்த்தகம்

சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு இது வரையில் காணப்பட்ட வற் வரி 15 வீதத்தினாலும், சுங்கத்தீர்வை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட மாத்திரத்தில் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் சீனி உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவடைந்துள்ள நிலையில், அந்த நலன் நுகர்வோரை சென்றடையவில்லை என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சீனியின் விலையை உயர்த்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

Latest Offers