இலங்கையில் கையடக்க தொலைபேசிகளிற்கு வந்த மவுசு! அதிர்ச்சியில் பலர்

Report Print Vethu Vethu in வர்த்தகம்

இலங்கையில் திடீரென கையடக்க தொலைபேசிகள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமகால அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கையினால் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்காக பல புதிய சட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.

அதற்கமைய இலங்கையில் ஒரு வருட காலப்பகுதியில் தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி, கையடக்க தொலைபேசி போன்றவற்றை கொள்வனவு செய்வதனை கடுமையாக அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

தற்போது மின் உபகரணங்கள் கொள்வனவு செய்தால் அதற்காக 100 சதவீத பெறுமதியை செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் இனி வரும் காலங்களில் மின் உபரகரணங்கள் கொள்வனவு செய்தால், பணம் செலுத்திவிட்டு நீண்ட காலம் சென்ற பிறகே பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இலங்கையில் மின் உபகரணங்களின் பெறுமதி 50 வீதம் வரை அதிகரிக்கும் என சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.

தற்போது சந்தையில் 20000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் கையடக்க தொலைபேசி ஒன்று எதிர்வரும் நாட்களில் 30000 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகளுக்கான பணத்தை செலுத்தும் நுகர்வோர் அதனை பெற சிலகாலம் காத்திருக்க வேண்டும். அதனை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு சில காலம் எடுக்கும் சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான புதிய நடைமுறை காரணமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers