உயிர் காக்கும் மருந்துகளை இலங்கையிலிருந்து திரும்பப்பெறவுள்ள நிறுவனங்கள்

Report Print Ajith Ajith in வர்த்தகம்

இலங்கை சந்தையில் உள்ள உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து வகைகள், இலங்கையில் இருந்து விநியோக நிறுவனங்களினால் திரும்பப்பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வார இறுதி ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில மருந்து பொருட்கள் இலங்கை சந்தையில் இருந்து அகற்றப்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் மருத்து பொருட்களின் விலைகளின் குறைப்பு ஏற்படுத்தப்பட்டமை மற்றும் டொலரின் பெறுமதி ஏற்றம் காரணமாக குறித்த மருத்துவ பொருட்களின் இறக்குமதிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புற்று நோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட்ட பல மருந்துகள் உள்ளடங்குகின்றன.

இதில் புற்றுநோய்க்கான பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலிம்டா 100 கிராம், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருதய நோய்க்கான ஹேர்பஸர் மற்றும் ஊசி மருந்துகளும் சந்தையில் இருந்து திறம்ப பெறப்படவுள்ளன.

Latest Offers