சர்வதேச ரீதியில் இலங்கை அன்னாசிக்கு கிடைத்துள்ள அங்கிகாரம்!

Report Print Murali Murali in வர்த்தகம்

தற்போது சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே மிகவும் சுவையான அன்னாசி பழங்கள் வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், Sri Lanka Pineapple என்ற வார்த்தக நாமத்துடன் இங்கிருந்து அன்னாசி ஏற்றுமதி செய்யவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு அமைய அன்னாசியின் சுவை ஏனைய நாடுகளுக்கு இல்லாது போயுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச ரீதியில் இலங்கையின் அன்னாசிக்கு பாரிய கேள்வி இருந்து போதிலும் தேவையான அளவு செய்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதியை இலக்காக கொண்டு மொனராகலை, மெல்லவத்தை பிரதேசத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி பயிர் வலயம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers