ஜனாதிபதியின் மாற்றம் - இலங்கை ரூபாவை இந்த நிலைக்கு தள்ளிவிட்டதா?

Report Print Varun in வர்த்தகம்

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 181 ரூபாய் 29 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆகஸ்ட மாதத்துடன் ஒப்பிடும்போது பாரிய முன்னேற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபாய் 62 சதமாகும் அதேசமயம் விற்பனை பெறுமதி 181 ரூபாய் 29 சதமாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வருடத்தில் 1.8 விகிதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதி நாட்டில் தெரிவானதே இந்த மாற்றதிற்கு காரணமாக கருதப்படுகிறது. அதேபோல புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளிலேயே கொழும்பு பங்குச் சந்தையின் மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது.