இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 75 ஆயிரம் ரூபாவை கடந்த தங்கத்தின் விலை

Report Print Sujitha Sri in வர்த்தகம்

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்துச் செல்வதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் கரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையிலேயே இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது 79,108.53 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 Ounce = 28.3495 Gram = 1,543.7 அமெரிக்க டொலர் (Today) = 280,335.92‬ இலங்கை ரூபா

1 Pavan = 8 Grams = 435.62 அமெரிக்க டொலர் (Today) = 79,108.53 இலங்கை ரூபா

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கமானது (Gold price per ounce) 1,543.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

ஒரு அமெரிக்க டொலரானது 181.60 இலங்கை ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.