உலக சந்தையில் குறைந்துள்ள எரிபொருட்களின் விலை

Report Print Ajith Ajith in வர்த்தகம்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை 2020 ஜனவரி ஆரம்பம் முதல் 10 வீதம் முதல் 20 வீதம் வரை குறைந்துள்ளன.

எனினும் அரசாங்கம் உள்ளூரில் எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு உலக சந்தையில் மேலும் விலை குறையவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கொரோனவைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர் எரிபொருட்கள் விலை உலக சந்தையில் குறைந்து வந்துள்ளது. இதன்படி இலங்கையில் எரிபொருட்களின் விலை 12 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கவேண்டும்.

எனினும் உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள அளவு உள்ளூரில் எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு போதுமானதல்ல என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 14ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

தற்போது எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள குறைவு தற்காலிகமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.