உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர் மட்டத்திற்கு வந்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1645.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸின் அழுத்தம் மற்றும் உலக பொருளாதார திசை திருப்பல் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகாரித்துள்ளது.
சமகால சூழ்நிலையில் தங்கத்தின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.