பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை

Report Print Vethu Vethu in வர்த்தகம்

சமகாலத்தில் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்துள்ள தேங்காய் விலை நவம்பர் மாதம் வரையில் 100 ரூபாய் வரையில் மேலும் அதிகரிக்க கூடும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சந்தையில் தேங்காய் ஒன்று 70 - 85 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தெங்கு செய்கை மூலம் மாதாந்தம் 250 மில்லியன் தேங்காய்கள் கிடைக்கின் போதிலும், அதில் 150 மில்லியன் பயன்பாட்டிற்கு எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கடந்த காலங்களில் சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.