தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனேடிய பிரதமர் : வைரலாகும் காணொளி

Report Print Vino in கனடா
2738Shares

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் உலகம் முழுவது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினை தமிழில் தெரிவித்துள்ளார்.

இந்திய, இலங்கை தலைவர்களிடம் இல்லாத பண்பும், அவரது தமிழ் பேசும் விதமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடாவில் ஆண்டு தோறும் தை மாதத்தினை நாடளாவிய ரீதியில் தமிழர் மரபுகளை அனுஷ்டிப்பதற்குரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments