உலகிலேயே அதிக எடை கொண்ட இருதயம் கனடா அருங்காட்சியகத்தில்!

Report Print Nivetha in கனடா
103Shares

நீலதிமிங்கலத்தின் இதயம் ஒரு காரின் அளவு மிக பெரியதாக இருப்பதாக தற்போது கனடாவின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான்.

இதில் நீல திமிங்கலங்கள் பாடவும் செய்கின்றன. மனிதனின் மூளையை விட திமிங்கலத்தின் மூளை பெரிது தான்.

ஆராய்ச்சியாளர்கள், 76.5 அடி கொண்ட ஒரு இறந்த நீல திமிங்கலத்தை கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அதன் உடலை அறுத்து இதயத்தை பார்த்த போது 180 கிலோவில் ஒரு காரின் அளவுக்கு இதயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஆராய்ச்சியாளர் கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக தற்போது தான் இறந்த நீல திமிங்கலம் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த திமிங்கலத்தின் இதயமும், எலும்புகளும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Comments