கனடாவை சூறாவளி தாக்கும் அபாயம்!

Report Print Thayalan Thayalan in கனடா

டெக்ஸ்சாஸின் கரையோரப் பகுதிகளை தாக்கி வரும் ஹார்வே சூறாவளியைத் தொடர்ந்து இரண்டாவது சூறாவளி உருவாகினால் அது கனடாவையும் தாக்கும் அபாயம் காணப்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் கிழக்குப் பகுதியில் இர்மா எனப்படும் சூறாவளி உருவாகலாம் எனவும் அவ்வாறு நடக்குமாயின் அது கனடாவையும் தாக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா – டார்த்மவுத் பகுதியில் உள்ள வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையின் மூலமாகவே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இர்மா எனப்படும் சூறாவளியானது இந்த வாரத்தின் இறுதியில் உருவாகக் கூடும் எனவும் குறித்த அறிக்கையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers