கனடிய கோடீஸ்வரரும் மனைவியும் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்!

Report Print Thayalan Thayalan in கனடா
கனடிய கோடீஸ்வரரும் மனைவியும் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்!

கனடிய மருந்து நிறுவனமான Apotex ன் ஸ்தாபகரும் கொடைவள்ளலுமான பெரி மற்றும் அவரது மனைவி ஹனி ஷேர்மன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இவர்களது மாளிகையில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணத்தை சந்தேகத்திற்கிடமாதென்ற நோக்கத்தில் விசாரனை செய்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கான்ஸ்டபிள் டேவிட் ஹொப்கின்சன் Apotex நிறுவனர் பெர்னாட் பெரி ஷெர்மன் மற்றும் அவரது மனைவி ஹனி இருவரது உடல்களையும் அவர்களது வீட்டில் அடையாளம் காணவில்லை எனவும் ஆனால் ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் தம்பதிகள் இருவரையும் இறந்த நிலையில் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய மரணத்தின் சூழ்நிலைகள் சந்தேகத்திற்கிடமாக தோன்றுவதால் தாங்கள் அந்த கோணத்தில் நோக்குவதாக ஹொப்கின்சன் தெரிவித்தார்.

மரணம் சம்பந்தமாக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கொடையாளரும் தொழில் முனைவருமான பெரி ஒன்ராறியோவை வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஒரு இடமாக செய்தவர் என கூறப்பட்டுள்ளது.

Apotex நிறுவனத்தை 1974ல் இரண்டு பணியாளர்களுடன் பெரி ஷெர்மன் ஆரம்பித்தார். கனடியரின் சொந்தமான மிக பெரிய மருந்து நிறுவனமாக வளர்ந்துள்ளது. கனடிய பணக்காரர்களில் 15-வது இடத்தில் இவர் உள்ளார்.

300ற்கும் மேற்பட்ட பொதுவான மருந்து பொருட்களின் தயாரிப்பாளரான இவரது பொருட்கள் 115ற்கும் மேற்பட்ட நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்று உலகம் பூராகவும் ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோக வசதிகள் போன்ற துறைகளில்10,000ற்கும் மேற்பட்ட மக்களும் கனடிய செயற்பாடுகளில் 6,000ற்கும் மேற்ப்பட்ட பணியாளர்களும் உள்ளனர்.

வருடமொன்றிற்கு 89மில்லியன் மருந்து சீட்டுக்கள் நிரப்படுகின்றன. இதன் உலகளாவிய விற்பனை வருடமொன்றிற்கு 2பில்லியன் டொலர்களிற்கும் மேலானதாகும்.

இவரது மனைவி ஹனி பேகிரெஸ்ட் அறக்கட்டளை மற்றும் யோர்க் பல்கலைக்கழக அறக்கட்டளை ஆகியவற்றின் சபை அங்கத்தவராவார்.

இவர்களது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விலாசம் அண்மையில் 6.9மில்லியன் டொலர்களிற்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.