கனடாவில் யாழ். இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு - உயிர் பறிக்கும் விளையாட்டான புளுவேல் விளையாடிய நிலையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்பட்டதாகவும், அதிலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனை பெறப்பட்டதாகவும், இதனாலேயே குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தோம். ஆனால் அத்தகவல்கள் உண்மையில்லை என உறவினர்களால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த செய்தியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மனம் வருந்துகின்றோம்.