வேட்டி அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

Report Print Thayalan Thayalan in கனடா

தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார்.

இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலைமை அமைச்சர்களும் தமிழக மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பொங்கல் தினத்தன்று கனேடிய தலைமை அமைச்சர், தமிழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் இந்த மதத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கற்றுக்கொள்வதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என பொங்கல் தினம் குறித்து கூறினார்.

இந்நிலையில் தமிழக மக்களுடன் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து கனடா நாட்டு பிரதமர் பொங்கல் விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியுளார்.

அதன் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.