கனடாவில் இலங்கைத் தமிழர்களின் மகத்தான பங்களிப்பு!

Report Print Vethu Vethu in கனடா

இலங்கையில் நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் எமது நாடு உதவும் என இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் நிரந்த அமைதி, சமாதானம், நல்லிணக்கத்துக்காக, கனடா தொடர்ந்து உதவி செய்யும்.

கனடாவில் இலங்கையர்கள் அதிகம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர் அதிகமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கனடாவின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகின்றனர்.

இலங்கையில், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுடன், வலுவிழந்தோர், மாற்றுத்தினாளிகளின் முன்னேற்றத்துக்கும், அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தவும் நாம் உதவி செய்து வருகின்றோம்.

இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலும் நல்லிணக்கமும் ஆரோக்கியமாகும். இதனை மேலும் வலுப்படுத்த கனடா அக்கறை காட்டி வருவதுடன் அதற்காக உதவி செய்தும் வருகின்றது எனவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers