கனடாவில் நடைபெற்று முடிந்த உலகின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட முதல்நாள் மாநாடு

Report Print Dias Dias in கனடா

உலகெங்கும் இருந்து கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் குழுமியுள்ள அறிவாளர்களும், மக்களும் பங்கெடுக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு நடைபெறும் மாபெரும் மாநாட்டின் முதல்நாள் அமர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தனர்.

அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வர விரும்பும் மக்களுக்கும் வசதிகள் செய்ய ஒழுங்கமைப்பாளர்கள் தயாராக உள்ளார்கள்.

உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு உடன் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: (647) 243 9396 Press # 2

கனடாவில் நடைபெறும் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட அறிஞர்களும் ஒட்டாவா விமான நிலையத்துக்கு வந்து சேர தொடங்கியுள்ளனர்.

வந்து சேர்ந்த அனைவருக்கும் கனேடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்பதே வருகை தந்துள்ள பேராசிரியர்கள், அறிவாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களின் வேண்டுகோள்.

தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நேரலையாக இந்த நிகழ்வை பின்வரும் இணைப்பில் காணலாம்.

இதில் இறுதி நிகழ்வாக தமிழர் அரசியல் மற்றும் அவர்களின் தனிநாடொன்றிக்கான தேவை போன்ற ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, பாராளுமன்றில் ஒருங்கமைக்கப்பட்டுள்ள நிகழ்வில் கனடாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக விளக்கமளிக்கப்படும்.

மேலும், கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஆரம்பித்து மூன்று நாட்கள் தொடரவிருக்கின்ற ஈழத்தமிழர் விவகாரம் குறித்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் இன்றும் தம் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் பல்நாட்டு வல்லுனர்கள் தமது ஆய்வுக்கட்டுரைகளை மண்டபம் நிறைந்த மனித உரிமை ஆர்வலர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அதேவேளை உறுதியளிக்கப்பட்ட பரிகாரநீதி குறித்த விடயத்தில் சர்வதேச சமூகத்தை தற்போதைய சிறீலங்கா அரசும் மோசமாக ஏமாற்றி வருவதையும் அது குறித்த பல விடயங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் சிறீலங்கா விடயத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் எவ்வாறு தொழிற்படலாம் என்பது குறித்தும் தமது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இன்று காலை இடம்பெற்ற இரண்டு அமர்வுகளில் பௌத்த மத சிங்கள இன வாத ஒடுக்கு முறைகளின் பரிமாணங்கள்பற்றியும், இராணுவ கடற்படைகளின் காணி அபகரிப்புகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்படும் பாதிப்புகள் பற்றியும் பல ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் தமது ஆய்வுகளையும் ஆதாரங்களையும் முன்வைத்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் கனடா மற்றும் நேச நாடுகள் தமிழர்கள் குறித்து எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும், இந்த மாநாட்டின் ஆய்வறிக்கைகள் உதவும். ஈழத்தமிழர் விவகாரம் குறித்த சர்வதேச ஆராச்சி மாநாடு ஒட்டாவா கனடா நேரடி ஒளிபரப்பு.