கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் - மகனுக்கு பெருந்தொகை நிதியுதவி

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் இறுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 45 வயதான ரேனுகா அமரசிங்க என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் ஹொரண பகுதியில் பிறந்த ரேனுகா, பல வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்த நிலையில் அங்கு குடியுரிமையை பெற்றிருந்தார்.

பலியான ரேனுகாவுக்கு ஏழு வயதில் மகன் உள்ளார். கணவன் இல்லாத நிலையில் அமைதியான முறையில் ரொரன்டோவில் வாழ்ந்து வந்துள்ளார்.

பாடசாலையில் மகனை விட சென்று மீண்டும் திரும்பும் போது இடம்பெற்ற பயங்கரவாத வாகன தாக்குதலில் சிக்கி அவர் உயிரிழந்திருந்தார்.

தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் Diyonனின் வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு 150,000 டொலர் தேவையாக உள்ளதென GoFundMe பக்கத்தில் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பணம் ரேனுகாவின் மகனுக்கு கிடைத்துள்ளது. அதற்கமைய 350,000 டொலர் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.