கனடா செல்ல முயற்சித்த இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Vethu Vethu in கனடா

கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த இலங்கை தமிழர் ஒருவர் பிலிபைன்ஸ் Ninoy Aquino சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கபிலன் கண்ணதாசன் என்ற 26 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவரும் கானா நாட்டை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறி, கனடாவில் வேலை செய்ய முயன்ற இருவரும் சட்டவிரோதமான கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் Ninoy Aquino சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் Taguig நகரில் குடியேற்ற தடுப்பு மையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கண்ணதாசன் தனது அடையாளத்தை மறைப்பதற்காக மோல்டா நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிலிப்பைன்ஸ் குடிவரவு சட்டத்தை மீறியதாக இருவருமே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரையும் நாடு கடத்துமாறும் குடிவரவு ஆணையாளர் Jaime Morente உத்தரவிட்டுள்ளதுடன், பிலிபைன்ஸ் நாட்டிற்குள் நுழைய முடியாத வகையிலும் இருவரும் கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...