கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - சிறுவர் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

எனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை.

பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தங்களுக்கு கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என டொரொன்டோ ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் யார் என தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.

#shooting on the #Danforth #danforthshooting

A post shared by MJ (@leftyone23) on